மட்டக்களப்பு நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 இளைஞர்கள் கைது

இந்த செய்தியை பகிருங்கள்!

மட்டக்களப்பு நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 இளைஞர்களை நேற்று இரவு கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய போதைபொருள் தடுப்பு பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து சம்பவதினமான நேற்று இரவு நாற்கேணி, இருதயபுரம், ஊறணி ஆகிய பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 இளைஞர்களை கைது செய்ததுடன் அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்து 2 கட்டு, 3 கட்டு கொண்ட ஹெரோயின்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..