மட்டு மாவட்டத்தில் ஆறு சமுர்த்தி வங்கிகள் கணணி மயமான வங்கிகளாக இயங்குகின்றன

இந்த செய்தியை பகிருங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறாவது கணணிமயமாக்கப்பட்ட சமுர்த்தி வங்கியை இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.பி.பந்துல திலகசிறி திறந்து வைத்தார்.

தற்போது நாடு பூராவும் உள்ள சமுர்த்தி வங்கிகளை கணணிமயமாக்கும் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வரும் இச்சந்தர்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 29 சமுர்த்தி வங்கிகளில் ஆறு வங்கிகள் தற்போது கணணி மயமாக்கப்பட்டு தங்கள் இலகு சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றன. அன்மையில் மட்டக்களப்பிற்கு விஜயத்தினை மேற் கொண்ட இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.பி.பந்துல திலகசிறி எருவில் சமுர்த்தி வங்கியையும், மாங்காடு சமுர்த்தி வங்கியையும் திறந்து வைத்து மக்களின் துரித சேவைக்கு கையளித்தார்.

இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருனாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய அரச அதிபர் சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கல் பணிகளை விரைவில் முடிக்கும் பட்டசத்தில் மக்களுக்கான சேவை விரைவு படுத்தப்படுவதுடன் வங்கியின் கட்டமைப்பும் சிறப்பாக இயங்க கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இதற்காக உழைத்த அனைவருக்கும் தம் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.பி.பந்துல திலகசிறி அவர்கள் இரண்டு சமுர்த்தி வங்கிகளும் சிறப்பாக தம் பணிகளை செய்துள்ளதாகவும் இதற்காக அர்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாரட்டுக்களையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு இக்கணணி மயமாக்கும் பணிகள் 2014ம் ஆண்டுகளில் மிக மும்முரமாக செயற்பட்ட போதிலும் சில தடைகள் காரணமாக தாமதமானதாகவும் இப்பணிகள் தற்போது மிக வேகமாக முன்னெனடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிளை கணணி மயமாக்கும் பணிகள் 2014ல் ஆரம்பிக்கும் போது மறைந்த அமரர் மாசிலாமணி நடேசராஜா தன்னுடன் சிறப்பாக ஒத்துழைத்ததாகவும் நினைவு கூர்ந்தார். மீதமாக இருக்கும் சமுர்த்தி வங்கிகள் பெப்ரவரி மாத இறுதியில் அனைத்து பணிகளையும் முடித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 29 சமுர்த்தி வங்கிகளும் கணணி செயற்பாட்டுடன் இயங்க வேண்டும் எனவும் கூறினார். தற்போதைய கால கட்டம் ஒரு அசாதாரன சூம் நிலை நிலவும் காலம் இக்காலத்தில் எனது உத்தியோகத்தர்கள் பல இன்னல்களின் மத்தியில் கொவிட் கொடுப்பணவு, மற்றும் கணணி மயமாக்கும் பணிகளில் சிறப்பாக செயற்பட்டு உள்ளர்கள் அவர்களுக்கான நன்மதிப்பை நான் இவ்விடத்தில் வாழ்த்துக்களாக தெரிவிப்பதாகவும் இதற்காக தம்முடன் உறுதுணையாக செயற்படும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் அவர்களுக்கும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அவர்களுக்கும் விசேட விதமாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அ.பாக்கியராஜா, மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் ஜீ.பே.மணோகிதராஜ் மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர் நி.கிரிதரன் மற்றும் இக்கணணி பணிகளை தலமையகத்தில் இருந்து செயற்படுத்தி வரும் திரு.பவளச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டதுடன் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இறுதியில் கலந்த கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன

Subscribe

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..