மாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்குகிறார் மைத்திரி

இந்த செய்தியை பகிருங்கள்!

ஆளும் பொதுஜனபெரமுன அரசில் தமக்கு உரிய இடம் கிடைக்கவில்லையென்ற அதிருப்தியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் ஒன்றிணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகிப்பவர்கள் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாண சபை தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில்உறுதியான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..