மார்ச் 5 ஆம் திகதி முதல் 1000 ரூபாவை வழங்க வேண்டும் – அரசாங்கம் வலியுறுத்தல்

இந்த செய்தியை பகிருங்கள்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலின் படி தோட்ட நிறுவனங்கள் மார்ச் 5ஆம் திகதி முதல் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்கவேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு வழங்கப்படாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தொழில் ஆணையாளருக்கு இருப்பதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியான வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை விதிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அத்துடன் பிரதிவாதிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் மாதம் 5ஆம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானியை இரத்து செய்யும் உத்தரவோ அல்லது அதற்கான இடைக்கால தடை உத்தரவோ பிறப்பிக்கப்படாததால் அது தொடர்ந்து அமுலிலேயே உள்ளது.

இதற்கமைய மார்ச் மாதம் 5ஆம் திகதி முதல் இந்த வேதன அதிகரிப்பை பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

அதனை வழங்காது விடுத்தால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து அந்த வேதனத்தை பெற்றுக்கொடுக்கும் அதிகாரம் தொழில் ஆணையாளருக்கு உள்ளது என அமைச்சர் கூறினார்.

அத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக வழங்க முடிந்தமை அரசாங்கம் பெற்ற வெற்றியாகும் என தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..