மீட்டரான வாழ்கை கொரோனா விழிப்புணர்வு வேலைத்திட்டம்

இந்த செய்தியை பகிருங்கள்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் சகல வாகனங்களுக்கும் ‘மீட்டரான வாழ்கை’ எனும் தொனிப்பொருளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

குறித்த விழிப்புணர்வுச் செயற்பாடானது வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜி.ஜெயசுந்தரவின் ஆலோசனையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பொது வெளியில் நடமாடுவோர் ஒரு மீட்டர் தூர இடைவெளியினைக் கடைப்பிடிக்குமாறும் ‘மீட்டரான வாழ்கை’ எனும் வாசகம் கொண்ட ஸ்டிகர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டது.

அத்தோடு பொது மக்களுக்கும் வாகனச் சாரதிகளுக்கும் முகக்கவசம் அணிவது தொடர்பாகவும், ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணுமாறும் பொலிஸாரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..