மீண்டும் கைது செய்யப்படுவாரா ரிஷாத்

இந்த செய்தியை பகிருங்கள்!

சிறுமி இஷாலினி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மீண்டும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரிசாத் பதியுதினை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

வீட்டு உரிமையாளர் என்ற அடிப்படையில் ரிசாத் பதியுதீன் பிரதான சிறுமியின் மரணத்தில் சந்தேகநபராக வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ரிசாத் பதியுதினின் மனைவி, மாமனார், மச்சான் மற்றும் தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரிசாத் பதியுதின் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மீண்டும் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..