மீண்டும் பாரிய கடன் தொகையை பெற அரசாங்கம் தீவிர முயற்சி

இந்த செய்தியை பகிருங்கள்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ள பாரிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக 250 கோடி அமெரிக்க டொலர்களை சர்வதேச சந்தையிலிருந்து கடனாகப் பெற அரசாங்கம் முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிசக்தி அமைச்சு இதற்கான பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்செப்ட் குளோபல் என்ற நிதி நிறுவனத்தின் ஊடாக இந்த பெருந்தொகை கடனைப் பெறவுள்ளதோடு, அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

இரண்டு வருட நிவாரண காலத்துடன் சேர்த்து இந்த கடன் தொகையை 12 வருடங்கள் என்ற அடிப்படையில் மீளச்செலுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளது. 03 சதவீத வருட வட்டி இதற்காக விதிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..