முன்னாள் இராணுவ அதிகாரி கொடூரமாக கொலை! நால்வருக்கு வலை வீச்சு

இந்த செய்தியை பகிருங்கள்!

வெலிகம – கப்பரதொட பிரதேசத்தில், முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நால்வரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் வெலிகம – வல்லிவல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, நால்வர் தேடப்பட்டு வருகின்றனர்.

வெலிகம கப்பரதொட பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் 50 வயதான முன்னாள் இராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்டிருந்தார்.

மேலும் சம்பவத்தில் 52 வயதான மற்றொரு நபர் காயமடைந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..