மோட்டார் சைக்கிள் களவாடிச் சென்ற நிலையில் 3 நாட்களிற்கு பின்னர் மீட்பு

இந்த செய்தியை பகிருங்கள்!

பாறுக் ஷிஹான்

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் களவாடிச்சென்ற நிலையில் 3 நாட்களிற்கு பின்னர் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட (2020-10-26) அன்று மதியம் விளினையடி சந்திக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்ட பல்சர் ரக மோட்டார் சைக்கிள் களவாடி செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜெயலத்தின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை காரணமாக வெள்ளிக்கிழமை (30) திகதி காணாமல் சென்ற மோட்டார் சைக்கிள் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தேடுதலில் மோட்டார் சைக்கிளை களவாடி சென்ற எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யபப்டவில்லை என்பதுடன் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸ் குழுவினருக்கு இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.

மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தற்போது உரிமையாளரிடம் கையளிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..