வடக்கு மற்றும் கிழக்குக்கு மேலும் 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள்!

இந்த செய்தியை பகிருங்கள்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங், குறித்த தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று கையளித்துள்ளார்.

சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இலங்கைக்கான இந்த தடுப்பூசிகளை சீனத் தூதுவர், ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கான தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி, சீனத் தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..