வாழைச்சேனையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது!

இந்த செய்தியை பகிருங்கள்!

கேரளா கஞ்சாவுடன் 41 வயதுடைய பிரபல கஞ்சா வியாபாரியொருவர் கோழிக்கடை வீதி, வாழைச்சேனையில் வைத்து நேற்று (19)திகதி திங்கட்கிழமை இரவு 09.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 1 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களாக வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கை காரணமாக பெருமளவிலான போதைப்பொருள், கஞ்சா போன்றனவும் அவைகளைக் கொண்டு செல்லப்பயன்படுத்திய வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட பலரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இத்துரித நடவடிக்கையில் வாழைச்சேனைப் பொலிஸாரின் செயற்பாடும் பாராட்டத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..