வாழைச்சேனையில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் , சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

இந்த செய்தியை பகிருங்கள்!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர், நேற்றிரவு (17) கைது செய்துள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையில் 1,600 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞனையும் 1,300 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 26 இளைஞனையும் கைது செய்தனர்.

இதேவேளை, சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் ஆற்று மணல் ஏற்றிச் சென்ற ஒருவரையும் நேற்றிரவு கைது செய்ததுடன், உழவு இயந்திரத்தையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..