விவேகானந்தா சமுதாய நிறுவகத்தினால் முல்லைத்தீவிற்கும் வெள்ள நிவாரணப்பணி

இந்த செய்தியை பகிருங்கள்!

மட்டக்களப்பினை மையமாகக் கொண்டு பல்வேறுபட்ட சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற விவேகானந்த சமுதாய நிறுவகத்தின் செயற்திட்டங்கள் விரிவாக்கல் ஊடாக இந்த வருடம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் ஊடாக அங்குள்ள சிறுவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் போன்றோரை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிலையமானது மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி கொண்டிருக்கின்றது.

தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவும் நோக்கில் புலம்பெயர் உறவுகளின் வேண்டுகோளுக்கமைய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட தலா 100 குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியினை கனேடிய தமிழ் மருத்துவ சங்கம் வழங்கியிருந்தது.

இந்நிகழ்வு விவேகானந்தர் சமுதாய நிருவகத்தின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் செந்தில்ஜனனி அவர்கள் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரதேச செயலாளர் சி.ஜெயகாந் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, சாரதா நிலையத்தின் ஆலோசகரும் ஓய்வுபெற்ற வலயக்கல்வி பணிப்பாளர் பொன்.பேரின்பநாயகம் அவர்கள், மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், சாரதா நிலைய நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில் அன்னை சாரதா நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் மாணவர்களிற்கான கல்வித்திட்டத்திற்கு முழு ஆதரவினை அளிப்பதாகவும், சிறுமிகள் காப்பகத்தினை நடாத்துவதற்கு அரச காணியினை வழங்குவதாகவும், அத்தோடு கனேடிய தமிழ் மருத்துவ சங்கத்திற்கு தனது நன்றியினையும் தெரிவித்தார்.

Subscribe

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..