வீட்டு வேலைக்காரிகளுக்கு பலவந்தமாக தடுப்பூசி பெற்றுக்கொடுத்த இராஜாங்க அமைச்சர்

இந்த செய்தியை பகிருங்கள்!

அரசாங்கத்திலுள்ள பிரபல இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது வீட்டில் வேலைபார்க்கின்ற இரு பெண்களுக்கு பலவந்தமாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொடுத்திருக்கின்றார் என்கிற தகவல் கிடைத்திருக்கின்றது.

கடந்த திங்கட்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு குறித்த இரு பெண்களையும் அழைத்துவந்த அந்த இராஜாங்க அமைச்சர், வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பலருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு இவ்வாறு தடுப்பூசியை அவர்களுக்கும் பெற்றுக்கொடுத்திருக்கின்றார்.

இதற்கு வைத்தியசாலை பணிக்குழாம் உட்பட பலரும் எதிர்ப்பை வெளியிட்டபோது உயரிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக அவர்களின் எதிர்ப்பு தவிடுபொடியாகிவிட்டதாகவே சொல்லப்படுகின்றது.

குறித்த இராஜாங்க அமைச்சர் வியத்மக என்கிற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்கூட்டிய பாதையை தயார்படுத்திய புத்திஜீவிகள் குழுவில் மேல் மாகாணத்திலிருந்து செயற்பட்டு பின் மேல் மாகாணத்திலேயே மொட்டுக் கட்சியில் போட்டியிட்டவர் ஆவார்.

பேராசிரியரான அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..