வேண்டும் ஆத்மா சாந்திபெற்றிடவே!

இந்த செய்தியை பகிருங்கள்!


வேண்டும் ஆத்மா சாந்திபெற்றிடவே!

தடைவந்த போதும்!
படைவந்த போதும்!
நடைமாறாகொள்கையுடன்!
குடைபோன்று சேவைசெய்தார்!
விடை பெற்றார் வருந்துகின்றோம்!

தமிழ்தேசியத்திற்காய் உழைத்தார்!
தன்மானத்தமிழினத்தின் காவலனாய்!
தன்னிகரற்ற பணி செய்த ஆண்டகை.!
அருட்திரு இராஜப்பு ஜோசப் அடிகளார்!
ஆகுதியானார் அஞ்சலி செலுத்துவோம்!

ஆன்மீக உடைதரித்து ஆண்டமண்ணில்!
ஆக்கிரமிப்பை எதிர்த்த யோக்கியவான்!
அனைத்துலக சமூகத்திற்கும் உண்மைகளை!
வினைத்திறனாய் நிருபித்த பெருமகனார்!
மறைந்திட்டார் மனமுருகி ஏங்குகின்றோம்!

மன்னார் மண்ணின் மறைமாவட்ட ஆயர்!
மறத்தமிழ் இனத்தின் மறக்கமுடியா பெரியார்!
அறத்தின் வழியில் அல்லல்களை தீர்தார்!
ஆண்டவன் அழைப்பில் எமைவிட்டு பிரிந்தார்!
வேண்டுவோம் ஆத்மா சாந்தி பெற்றிடவே!

-அம்பிளாந்துறையூர் அரியம்-

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..