வைத்தியர் சுகுணன் நல்லவர் ! வல்லவர் ! அரசியல்வதிகளின் பிரச்சாரங்களை நம்பாதீர்கள்! கருணா

இந்த செய்தியை பகிருங்கள்!

கூட்டமைப்பினர் தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை குழப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கொண்டிருக்கின்றார்கள் என பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு இன்று (22) அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இரவு கல்முனையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

இந்த அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது.உண்மையில் இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை இருக்கின்றது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.ஏனென்றால் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதே போன்று இரண்டாம் கட்டம் வழங்குவதற்கும் தயார்படுத்தப்பட்டு வருகின்றது.இவ்வாறு ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் ஜனாதிபதியிடம் இருக்கின்றது.இதை நான் அரசாங்கத்துடன் நெருக்கமானவன் என்ற வகையில் தொடர்ந்து இப்பணிகளை எமது மக்களுக்கு பெற்று தருவோம் என்பதை நான் இவ்விடயத்தில் கூறிக்கொள்கின்றேன்.

கூட்டமைப்பினர் தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை குழப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கொண்டிருக்கின்றார்கள் .உண்மையில் இவ்விடயத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வாக்கு சரிவடைந்து வருகின்றது என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.அதை கட்டியெழுப்புவதற்காக வெறும் கோஷங்களை தூண்டி மக்களை உணர்ச்சி வசப்படுத்தி மாற்றங்களை உருவாக்கலாம் என கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள்.அது நிறைவேறப்போவதில்லை.ஏனெனில் மக்களுக்கு தேவையான விடயங்கள் என்னவென்று மக்களுக்கு நன்கு தெரியும்.அதனால் தான் இன்று மக்கள் எங்களுக்கு வாக்குகளை அள்ளி வழங்கினார்கள்.இதனடிப்படையில் தான் எனக்கு அம்பாறை மாவட்ட மக்கள் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளார்கள்.இதே போன்று தான் ஏனைய பிரதேசங்களிலும் கூட்டமைப்பினருக்கு சரிவு ஏற்பட்டிருந்தது.ஆகவே இதை நிவர்த்தி செய்வதற்காக வெறுமையான திட்டங்களையும் வெற்று கோஷங்களையும் மக்கள் மத்தியில் உருவாக்கி துண்டுகின்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள்.இவர்களது செயற்பாடுகளை மக்கள் கண்டுகொண்டதாக நான் அறியவில்லை.

அத்துடன் குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்களை பாராட்டியே ஆக வேண்டும்.எமது பிராந்திய வைத்திய அதிகாரி சுகுணன் அவர்கள் மிகவும் திறன்பட சேவைகளை வழங்கி வருகின்றார்.அவருக்கு மக்கள் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி இருந்தார்கள்.பல மாதங்களாக சில பிரதேசங்கள் முடக்கப்பட்ட போதிலும் மக்கள் எவ்வித கொந்தளிப்புமில்லாமல் கொரோனா அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பதற்காக ஒத்துழைத்திருந்தனர்.அதனால் கோரோனாவின் பரவல் மிகவும் குறைவடைந்து வரும் நிலையில் இருக்கின்றது.மக்கள் மத்தியில் குறித்த வைரஸ் தொடர்பில் அச்சமில்லை.ஏனெனில் மக்கள் அதிலிருந்து சுயமாக தப்பி கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதனால் அதிலிருந்து மக்கள் மீள எழுவதற்கான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..