''தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து'' தமிழக அமைச்சர் கள ஆய்வு

 

மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை

தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தமிழக சிறு துறைமுகங்கள் அமைச்சர் ஈ.வி.வேலு தெரிவித்திருக்கிறார்.

இராமேஸ்வரம் பகுதிக்கு ஆய்வுப் பணிகளுக்காக சென்றிருந்த போதே அமைச்சர் ஈ.வி.வேலு இதனை குறிப்பிட்டுள்ளார்.ஆழப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள்


இராமேஸ்வரத்திற்கு அடுத்துள்ள பாம்பனில் உள்ள தொடரூந்து பாலம் வழியாக சிறிய சரக்கு கப்பல்கள் சென்று வர ஏதுவாக கடலுக்கு அடியில் 10 மீட்டர் ஆழப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் பற்றி அமைச்சர் ஈ.வி.வேலு ஆய்வு செய்தார்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 100 சதவீதம் மானியங்கள் வழங்கும் பட்சத்தில் சிறிய சரக்கு கப்பல்கள் பாம்பன் தொடரூந்து பாலம் வழியாக செல்ல முடியும் என்று சிறு துறைமுகங்கள் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாம்பன் தொடரூந்து பாலம் வழியாக செல்லல்


பாக்கு நீரிணை பகுதியில் கடலை ஆழப்படுத்துவற்காகவும் செலவு குறித்து திட்டம் மதிப்பீட்டு பணிகளுக்கு பின்னர் தெரிய வரும் என்று அமைச்சர் ஈ.வி.வேலு குறிப்பிட்டார்.

பூர்வாங்க பணிகளுக்கு பின்னர் ஒன்றிய அரசிடம் இது தொடர்பாக விளக்கம் அளித்து உரிய நிதியை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் துறைமுகங்கள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.