சர்ச்சைகளுக்குரிய சீனக் கப்பல் இன்று முதல் 07 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்


சீனாவின் யுவான் வேங் – 5 (Yuan Wang 5) அதி தொழில்நுட்ப ஆய்வு, கண்காணிப்பு கப்பல் சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது .


பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சீனக் கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 07 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் குறித்த கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது

சீனாவின் யுவான் வாங் 5 என்ற கப்பல் அந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வகைக் கப்பலின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்ததோடு இந்த வகையான ஏழு கப்பல்களை சீனா கொண்டிருக்கின்றது.

மேலும் இந்தவகைக் கப்பல்களில் செயற்கைக்கோள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதல், தகவல்தொடர்பாடல், மின்னணு வலையமைப்பு ஆகிய செயற்பாடுகளை கண்காணிக்கும் போன்ற வசதிகளை கொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.