காலி நகரில் முட்டைக் கடை ஒன்றின் வர்த்தகர் ஒருவருக்கு 43 ரூபாவிற்கு விற்க வேண்டிய முட்டை ஒன்றை 54 ரூபாவிற்கு விற்றதாக நுகர்வோர் அதிகார சபை அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு காலி பிரதான நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன முன்னிலையில் இன்று நடைபெற்றது.
