12 எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் !


கி.யூ. ஆர் முறையை நடைமுறைப்படுத்தாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்துடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலில் குறித்த தீ்ரமானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, கி.யூ.ஆர் முறையை நடைமுறைப்படுத்தாத 12 எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் பொதுமக்களின் முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.