நேற்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து வசந்த முதலிகே உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எவ்வாறாயினும் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்போவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
