தாய்லாந்தில் ஒரே நாளில் 17 இடங்களில் குண்டு வெடிப்பு!

தெற்கு தாய்லாந்தில் இன்று (17) 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை குண்டுவெடிப்பு மற்றும் தீ வைப்பு நடத்தப்பட்டதுடன், பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களினால் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Published from Blogger Prime Android App