நாளை முதல் 19ஆம் திகதி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாளை முதல் 19ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, A முதல் W வரையான வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

M, N, O, X, Y, Z ஆகிய வலயங்களுக்கு அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரை மின்துண்டிப்பு அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App