இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தி- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) 2000 நாட்களை கடந்துள்ளது.

இதேவேளை உறவுகளை தேடியலைந்து 121 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதில் வவுனியா மாவட்டத்தில் 16 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் , ஐக்கிய நாடுகள் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிட்டதக்கது.
Published from Blogger Prime Android App