மற்றுமொரு 30,000மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வருகிறது!

எதிர்வரும் சில நாட்களில் மற்றொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

30 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இதற்கிடையில், மசகு எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த 13ஆம் திகதி இரவு நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App