நாளை மாலை 5 மணிக்கு முன் காலி முகத்திடலை விட்டு வெளியேறுங்கள் : போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் உத்தரவு

காலிமுகத்திடலையும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களையும் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணிக்கு முன்னர் தமது போராட்ட இடங்களிலிருந்து வெளியேறுமாறு கோட்டை பொலிஸார் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரச அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதியற்ற கட்டுமானங்களை நிறுவி பயிர்களை பயிரிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மக்களின் பொருள் உரிமைகள் பறிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர் .

மேலும், ஆகஸ்ட் 5ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னதாக அந்த இடத்தை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்குமாறும், மேற்கண்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.Published from Blogger Prime Android App