அடையாளம் தெரியாத நபரால் எனது கணக்கில் 5 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது : ரட்டா

பிரபல யூடியூபரும், கோட்டகோகாமா செயற்பாட்டாளருமான ரதிந்து சேனாரத்ன என்ற ‘ரட்டா’, தனது கணக்கில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூலம் 5 மில்லியன் ரூபா பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்த உரிமை கோரப்படாத பரிவர்த்தனை குறித்து சம்பந்தப்பட்ட வங்கியில் ஏற்கனவே முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ரட்டா முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தம்மையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்யும் முயற்சியாகக் கருதுவதால் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Published from Blogger Prime Android App