நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 அரசியல்வாதிகளின் நீர் விநியோகத்தை துண்டிக்க தீர்மானம் !

நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பல்வேறு நிலைகளில் உள்ள 60 அரசியல்வாதிகளின் நீர் விநியோகத்தை துண்டிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

இந்த அரசியல்வாதிகள் செலுத்த தவறிய குடிநீர் கட்டணங்களின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகும் . அமைச்சர்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறியவர்களாவர் .

மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய ஓய்வுபெற்ற அமைச்சர்களின் ஓய்வூதியத்தில் இருந்து நிலுவைத் தொகையை மீட்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு நீர் பாவனையாளர்கள் செலுத்தத் தவறிய தொகையின் பெறுமதி 700 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் மொத்த நீர் நுகர்வோர் எண்ணிக்கை 28 இ லட்சம்.
பத்து இலட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தண்ணீர் கட்டணத்தை (மாறுபட்ட அளவுகளில்) செலுத்த தவறியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Published from Blogger Prime Android App