சீரற்ற வானிலை காரணமாக 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிப்பு.





தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

வானிலை காரணமாக அனர்த்தங்கள் நிகழுமாயின் உடனடியாக 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.