91 அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு பூஜ்ஜியமாகிவிட்டன!

மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 9 முதல் 11 மாதங்கள் வரையிலான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது 3 முதல் 4 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​​அதிக வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலம் நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இன்றி தொடர்ச்சியாக மருந்துகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என UNICEF இன் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்வரும் சில வாரங்களில் மேலும் குறைவடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் மத்திய மருந்துக் களஞ்சியத்தில் கடந்த வாரம் முதல் 91 அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Published from Blogger Prime Android App