கருணைவிழுதுகள் அமைப்பினால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!


கருணை விழுதுகள் அமைப்பினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தலா 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மட்/பட்/சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நேற்றைய(09)தினம் வழங்கிவைக்கப்பட்டன.

நாடு பூராகவும் இவ்வாறான உதவித்திட்டங்களை வழங்கி வரும் கருணை விழுதுகள் அமைப்பிற்கு ஜே.நிரோன் என்னும் தனவந்தர் இதற்கான நிதியுதவியினை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.