மின்சாரத்தை துண்டிக்கும் கால எல்லை மீண்டும் அதிகரிப்பு!

மின்சாரத்தை துண்டிக்கும் கால எல்லை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கபட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது .