எரிசக்தி பிரச்சினை குறித்து , சீனாவின் சூரிய சக்தி உற்பத்தி நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை!

நாடு எதிர்கொண்டுள்ள எரிசக்தி பிரச்சினை குறித்து , சீனாவின் சூரிய சக்தி உற்பத்தி நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், மீளுருவாக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. மேலும், இவ் வேலைத் திட்டங்களை வலுவூட்டுவதற்கான வழிவகைகளையும் பெலிசிடி நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர், கலந்துரையாடினார்.

இதனால், நாட்டிற்கு கிடைக்கவுள்ள நன்மைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன், ஏற்பாடு செய்யப்படவுள்ள சர்வதேச எரிசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறும் சீன நிறுவன அதிகாரிகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில், அமைச்சரின் ஆலோசகர் திரு ஹெட்டியாராச்சி, இலங்கை தேசிய கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய பணிப்பாளர் முர்ஷிதீன், ஏற்பாட்டாளர் களுத்துறை நகர சபை உறுப்பினர் ஹிஷாம் சுஹைல், சியாஸ் சதுர்டீன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Published from Blogger Prime Android App