போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருதானை – டெக்னிக்கல் சந்தி பகுதியில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் காரணமாக மருதானை – டெக்னிக்கல் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Published from Blogger Prime Android App