இரகசிய இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வசந்த முதலிகே !

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பேலியாகொட பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, விசேட விசாரணைக்காக இன்று காலை வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட இடம் எது என்பது குறித்து தகவல் எதனையும் வழங்க முடியாதென, பேலியாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பில் இந்த மாதம் 18ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினையடுத்து கைதுசெய்யப்பட்ட வசந்த முதலியே உள்ளிட்ட 16 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
Published from Blogger Prime Android App