ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இறக்கப்பட்டுள்ளது!

நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இறக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அதிகாரி ஒருவரினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் 19ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகின்றது.

மேலும், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App