இலங்கையின் நேர்மையான நம்பகதன்மை மிக்க நண்பனாக சீனா விளங்கும் - சீனாவின் வெளிவிவகார அமைச்சர் !

இலங்கையின் நலன்களிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எதனையும் செய்யமாட்டோம் என உறுதியளித்துள்ள சீனா நேர்மையான நம்பகதன்மை மிக்க நண்பனாக விளங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. ஆசியான் வெளிவிவகார அமைச்சர் மாநாட்டின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்த சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் ஐக்கியப்படும் நெருக்கடிகளில் இருந்து விடுபடும் நடவடிக்கைகளிற்கு தலைமை தாங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அவர் அபிவிருத்தி என்ற சரியான பாதையில் நாட்டை இட்டுச்செல்லும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இறைமை சுதந்திரம் ஆலோசனைகள் மூலம் அதன் கடன் முயற்சிகளிற்கு தீர்வை காண்பது கொள்கையை தொடர்ந்து பேணுவது சமூக ஸ்திரதன்மையை பேணுவது பொருளாதார மீட்சியை ஸ்திரப்படுத்துவது போன்ற இலங்கையின் நடவடிக்கைகளிற்கு சீனா உறுதியான ஆதரவை அளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App