தற்போது கட்சியின் தலைவராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை அந்தப் பதவியில் இருந்து நீக்கி, அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முன்மொழியப்பட்டது. இது தவிர ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்ச எந்த பதவியையும் ஏற்கமாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
