அதிகரிக்கும் கையடக்க தொலைபேசிகளின் விலைகள்!
கையடக்க தொலைபேசிகளின் விலைகள் எதிர்காலத்தில் பாரியளவில் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளதன் விளைவாக விலைகள் சடுதியாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு விலைகள் அதிகரிக்குமானால் ஒரு சில வர்த்தகர்களுக்கு நன்மை கிடைக்கும் அதே வேளை மக்கள் பாரிய அளவில் பாதிப்படைவார்கள்.