அண்மை காலமாக சில வியாபாரிகள் முட்டையை ரூ.70க்கு விற்பனை செய்வதால் முட்டை விலை சடுதியாக உயர்ந்துள்ளது.
உள்ளூர் மாஃபியா காரணமாக பொதுமக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நியாயமற்ற விலை உயர்வை சமாளிக்க முட்டையை இறக்குமதி செய்ய ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தை வலுப்படுத்த அதிகாரிகள் விரும்பாத காரணத்தினால் உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கு எந்த பொறிமுறையும் இல்லை.
எந்தச் சட்டம் கொண்டு வந்தாலும், கோழிக்குஞ்சு தங்கம் கொடுக்கப்படுவதில்லை, எனவே முட்டை விலையை குறைக்க வேண்டும். என்றார்.
முட்டையின் விலை அதிகரிப்பால் முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வறியவர்கள் அத்தியாவசியப் புரதங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய போக்கு தொடர்ந்தால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வார்கள் எனவும் அவர் எச்சரித்தார்.
எனவே முட்டையை இறக்குமதி செய்து விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
