யூரியா உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை!


பெரும்போக பயிர்ச்செய்கைக்காக 100,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


இந்த யூரியா உரம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த வருட பெரும்போகம் 800,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.