மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் ஏழாம் நாள் திருவிழா.

வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் இன்று(27) ஏழாம் நாள் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்றன. விநாகப்பெருமான் மூஷிக வாகனத்திலும்,முருகப்பெருமான் மயில்வாகனத்திலும் வலம் வரும் காட்சிகள் அடியவர்களுக்கு அருள் வழங்கும் கண்கொள்ளாக் காட்சியாகும்.தீர்த்தோற்சவம் எதிர்வரும் 10.09.2022 அன்று இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.