முன்னாள் ஜனாதிபதிக்கு என சட்டம் வழங்கியுள்ள சில சலுகைகள் மற்றும் நன்மைகளிற்கு கோத்தபாய ராஜபக்சவும் உரியவர் என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலை மதிப்பிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதியொருவர் நாட்டிற்கு திரும்பும்வேளை வேண்டுகோள் விடுக்கும்போதெல்லாம் சட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்படவேண்டிய பாதுகாப்பினை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் தற்போது வசிக்கும் கோட்டாபய குடும்பத்தினர் நாட்டிற்கு பாதுகாப்பாக வருவதற்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என சட்டம் தெரிவிக்கின்றது எனவும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டிற்கு பாதுகாப்பாக திரும்புவதற்கான உரிய பாதுகாப்பை அரசாங்கம் வழங்கவேண்டும் எனவும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டிற்கு திரும்புவதற்கான அடிப்படை உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் நிலைமை குறித்து இலங்கை அதிகாரிகள் முழுமையான மதிப்பீடுகளையும் மேற்கொள்ளவேண்டும்,இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள் அவ்வாறான அடிப்படை உரிமை மீறல் நிகழ்வதை தடுப்பதற்கான அனைத்து பொருத்தமான வழிமுறைகளை எடுத்து கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டிற்கு திரும்புவதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
