மக்களின் வாழ்வாதார சுமையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸமக்களின் வாழ்வாதார சுமையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

‘ஊழல் மோசடிகளை நிறுத்தவும் மின்சார கட்டணத்தை குறைக்கவும்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற வளாகத்துக்கு முன்பாக இன்று (30) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

தற்போதைய அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளது.

நூற்றுக்கு 75 சதவீதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள போவதாக சில ஊடகங்கள் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றன. பொய்யான செய்திகளை பரப்புவது ஒருபுறத்தில் நடந்துகொண்டு இருக்கும்போது மின்கட்டணமும் மனிதாபிமானமற்ற முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி மோசடியில் பெற்றுக்கொண்ட டொலரை பிரித்து கொடுப்பதற்காகவா அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு எம்மிடம் அரசாங்கம் கோருகின்றது?

நாட்டு மக்களால் இந்த நாட்டில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பாணின் விலை பன்மடங்கு உயர்வடைந்துள்ளது. வாழ்வாதார செலவீனம் அதிகரித்துள்ளது. உணவுப்பொருட்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. சகல பக்கங்களில் மக்கள் அசாதாரண சூழலை எதிர்கொண்டுள்ளனர். மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

கிராமங்களில் வாழும் மக்கள், நகர்புறங்களில் வாழும் மக்கள் என சகல தரப்பினரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.