போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம்!

அரசாங்கத்தின் அடங்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உரிமைக்காக கொழும்புற்கு செல்வோம் எனும் தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடக்குமுறையை நிறுத்துவதுடன், கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உடனடியாக இரத்து செய், மக்கள் சக்தியை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம்,

இனி கடன் இல்லை, திருடப்பட்ட பணத்தை கொடு, பொருட்களின் விலை-வரிச் சுமையைத் தாங்க முடியாது,

3 வருடங்களாக முடங்கிக் கிடக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக திற, என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Published from Blogger Prime Android App