இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு புதிய விமானம் !

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்தியா வழங்கியுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

புதிய விமானம் ஒன்றை தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், ஆரம்ப இரண்டு ஆண்டுகளுக்கு விமானத்தை இலவசமாக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முதல் இரண்டு ஆண்டுகளின் முடிவில் புதிய டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த கடல்சார் கண்காணிப்பு விமானத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி தனது கடற்படைக்கு உள்வாங்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Published from Blogger Prime Android App