அரச ஊழியர்களுக்கான சுற்று நிருபத்தை நீக்க தீர்மானம்!

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் இந்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கமைய நாளை மறுநாள் முதல் அனைத்து ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு அரச நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன குறிப்பிட்டுள்ளார்.
Published from Blogger Prime Android App