எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் – வர்த்தக அமைச்சு !

பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியதை தொடர்ந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு பாரியளவில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 கிலோ பருப்பின் விலை சுமார் 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App