சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப் பத்திரம் தொடர்பான முக்கிய தகவல் வெளியானது!

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளைப் பதிவுசெய்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப் பத்திரம் ஆகியவை செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படவுள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு மீளாய்வு கூட்டம் இன்று இணையவழி ஊடாக நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டைச் சேர்ப்பதற்கான சிறப்பு வகையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App