ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டியில் கடன்!

தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

க.பொ.த (உயர்தர) பரீட்சை மூலம் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு 02 வருடங்கள் கல்விசார் பயிற்சிகளிலும் ஒரு வருடம் உள்ளகப் பயிற்சியும் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். ஒரு வருடகால உள்ளகப் பயிற்சிக்காக கல்வியியல் கல்லூரிகளில் தங்குமிடம் வழங்கப்படாததுடன், தங்குமிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை ஆசிரிய பயிலுநர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போது ஆசிரிய பயிலுநர் ஒருவருக்கு கல்விசார் பயிற்சியின் போது செலுத்தப்படும் 5,000/- ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை.

அதனால், ஆசிரிய பயிலுநர்களுக்கு தற்போது கிடைக்கின்ற கொடுப்பனவுக்கு மேலதிகமாக மாதமொன்றுக்கு உயர்ந்தபட்சம் மேலும் 10,000/- நிதி வசதியை சலுகை வட்டி அடிப்படையில் அரச வங்கியொன்றினூடாகப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Published from Blogger Prime Android App